தாராபுரத்தில் 4 அரசு அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா; நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடல்!

கோவை: கோவை வெரைட்டி ஹால் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் வடமாநில தொழிலாளி நடிகரின் மரணத்தின் வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: தாராபுரம் நகராட்சி அலுவலக ஊழியர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்காலிகமாக நகராட்சி அலுவலகத்தை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னை சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில் அந்த பெண் ஊழியர் மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மேலும் நகராட்சி அலுவலக பெண் ஊழியருடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, 5 பேரும் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நகராட்சி அலுவலகத்தை மூட உத்தரவிட்ட அதிகாரிகள், மற்ற நகராட்சி அலுவலக ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியினை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது நகராட்சி அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று இரவிலிருந்து நடைப்பெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு அலுவலகம் மூடப்பட்டது, இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...