கோவை: கோவை வெரைட்டி ஹால் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் வடமாநில தொழிலாளி நடிகரின் மரணத்தின் வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சமீபத்தில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளி ஒருவர் சுஷாந்த் சிங் மரணத்தின் வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் எழுதி வைத்த கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கணபதி தாஸ்(20). இவர் கோவை வெரைட்டி ஹால் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் இன்று மதியம் அதே பகுதியில் உள்ள தங்களது அறைக்கு உணவருந்த வந்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அங்கு சென்ற சக ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது நைலான் கயிறு ஒன்றால் கணபதி தாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் வடமாநில தொழிலாளியின் தற்கொலை குறித்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தகவலின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற போலீசார் கணபதி தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், அந்த அறையில் "நான் சுஷாந்த் சிங் பாய் கிட்ட போறேன்" என்று இந்தியில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.