கோவை: முழு ஊரடங்கை அறிவிக்கக் கூடாது என்று இளையதலைமுறை என்ற சமூக விழிப்புணர்வு அமைப்பு கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இளையதலைமுறை அமைப்பு மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த மூன்று மாத காலம் கொரோனா தொற்று நோயின் காரணமாக அரசு பல்வேறு முறையில் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது.
அதை தங்களால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுத்தியதில் மகிழ்ச்சி அடையும் அதே வேளையில், மக்களின் மனநிலையை அது மோசமாக மாற்றியுள்ளதை எங்களால் உணர முடிகிறது.
மேலும், கோவையில் உள்ள அவிநாசி சாலை, திருச்சி சாலை, காந்திபுரம், R.S புரம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டு உள்ளத்தையும், வாடகை வீடு (Tolet) அட்டை மாட்டி இருப்பதையும் பார்க்கையில் கொரோனா மீது உள்ள அச்சம் நீங்கி வாழ்க்கை மீது உள்ள அச்சம் அதிகரிக்கிறது.
இதே நிலை தொடர்ந்தால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நிச்சயம் ஒரு வருட காலத்திற்கு மேல் ஆகும் என்பதை அரசு உணர்ந்து முழு அடைப்பு என்பதை அறிவிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளது.