கோவை: கோவையில் முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் உட்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளருமான ஆறுமுகம், செயலாளர் சிவசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு மண்டல செயலாளர் ஜேம்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்தன்னண் குள ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகளுடன் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.