கோவை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர்கள், தங்களது மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்கும் முடிவுகளை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 292 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பெண்கள் உட்பட 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பாதித்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 185 பேர் சிகிச்சை பெற்று வருவதாக இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்