கோவை சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

கோவை: கோவையில் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கோவை சித்ரா பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த எஸ். லிலியன் ஜெப் (21). நேற்று சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் உள்ள ஒரு உணவகம் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சரவணம்பட்டி போலீசார் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த லிலியன் ஜெப்பை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவலர்கள் அவரை சோதனையிட்ட போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த பகுதியில் அதிக அளவில் கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...