கோவை: கோவை போத்தனூர் அருகே சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை அடுத்த போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் முகமது பீர் பாஷா(66). இவர் அருகில் வசித்து வரும் 16 வயது சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்துள்ளார்.
அந்த சிறுமியிடம் 'எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா' என்று கேட்டு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். இதனை அச்சிறுமி அவரின் தாயாரிடம் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, முகமது பீர் பாஷாவின் குடும்பத்தாரிடம் சிறுமியின் பெற்றோர் தெரிவித்து உள்ளனர். முதியவரை கண்டித்த அவரது குடும்பத்தினர் அவரது செயலுக்கு மன்னிப்பு கோருவதாக கூறி இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்த நிலையில், மீண்டும் வயதான அந்த நபர் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். பின்னர் இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, புகாரை விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.