கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியரின் உடல் கோவையில் அடக்கம்!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 22 வயது 108 ஆம்புலன்ஸ் ஊழியரின் உடல் கோவையில் அடக்கம் செய்யப்பட்டது.

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 22 வயது 108 ஆம்புலன்ஸ் ஊழியரின் உடல் கோவையில் அடக்கம் செய்யப்பட்டது. 

கடந்த சில நாட்களாக, கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் சேவையில் அவசர மருத்துவராக (ஈ.எம்.டி) பணிபுரிந்து வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 22 வயது நபர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஜூன் 19 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். 

இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலம் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் அவர் இறுதி சடங்குகள் இன்று காலை கோவையில் நடைப்பெற்றது.

பெற்றோர் முன்னிலையில் கோவை ஆத்துப்பாலத்தில் உள்ள மின் மயானத்தில் சுகாதாரத்துறையினரால் பாதுகாப்பாக அடக்கம் அவரது உடல் எரியூட்டப்பட்டது.

குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசான, இவருக்கு 4 சகோதரிகள் உள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஒரே ஆண் வாரிசையும் பறிகொடுத்த தாய் கதறி அழுத காட்சிகள் காண்போரைக் கண் கலங்கச் செய்தது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...