கோவை: 108 ஆம்புலன்ஸ் சேவையில் அவசர மருத்துவராக (ஈ.எம்.டி) பணிபுரிந்து வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 22 வயது நபர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக, கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று 22 வயதேயான ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 18ம் தேதியன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டம் மங்களத்தில் தங்கியிருந்ததால் திருப்பூர் மாவட்ட பாதிப்படைந்தோர் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டார். பின்னர், அவர் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே, அவர் திண்டுக்கல்லுக்கு சமீபத்தில் பயணம் செய்து வந்ததாகவும் அப்போது நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி பலியானதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு இளம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் உயிரிழந்த சம்பவம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.