கோவை: கோவையில் வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் மற்றும் உறவினர்கள் மீது பெண் புகார் அளித்தது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபால் என்பரின் மகள் நிவேதா ஸ்ரீ(27). இவருக்கு ஈச்சனாரி பகுதி புயூன் காலனியை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனிடையே, கார்த்திக்கின் தாயார் மற்றும் சகோதரர்கள் நிவேதா ஸ்ரீயிடம் தொடர்ந்து நகை மற்றும் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று கார்த்திக் மற்றும் அவரது தாய், சகோதரர்கள் நிவேதா ஸ்ரீயை தாக்கி நகை மற்றும் பணம் பெற்று வருமாறு கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுக்கவே அவரை கணவர் மற்றும் உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, போத்தனூர் காவல் நிலையத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப் படுத்துவதாக புகார் அளித்தார்.
இதையடுத்து, புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.