கோவை: கோவையில் உரிய அனுமதி பெறாமல் நேர்காணல் நடத்திய தனியார் நிறுவனத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
கோவை: கோவையில் உரிய அனுமதி பெறாமல் நேர்காணல் நடத்திய தனியார் நிறுவனத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள எம் இந்தியா டெவலப்பர்ஸ் என்ற தனியார் வீட்டுமனை விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் விதிகளை மீறி அதிக அளவிலான ஊழியர்களை கொண்டு இயங்குவதாகவும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்களை அழைத்து நேர்காணல் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.
இதன் அடிப்படையில், கோவை வடக்கு வட்டாட்சியர் மகேஷ் குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் அந்நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரசின் எந்தவித அனுமதியும் பெறாமல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 120 நபர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தியதாகவும், நேர்முகத் தேர்வில் பங்கேற்ற நபர்கள் சமூக இடைவெளியின்றி முக கவசம் அணியாமல் இருந்ததாகவும் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான நபர்களை அனுமதித்து நேர்முகத்தேர்வு நடத்தியதாக நோட்டீஸ் ஒட்டி எம் இந்தியா டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.