கோவை: கோவையில் 16 வயது சிறுமியிடம் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக ஆபாசமாக பேசிய கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவரது மளிகை கடையில் அவர் சில மாதங்களுக்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக கடையின் உரிமையாளர் ராமலிங்கம் அந்த சிறுமியிடம் உணர்வை தூண்டும் வகையில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமி இது குறித்து தனது உறவினரிடம் தெரிவித்து உள்ளார்.
பின்னர் இது குறித்து சிறுமியின் உறவினர்கள் கோவை ஆர்.எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கடையின் உரிமையாளர் ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.