கொரோனா வைரஸ் தொற்றை மூன்று நாட்களில் குணப்படுத்த முடியும் - தேசிய சித்த மருத்துவ நிறுவனம்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றை மூன்று நாட்களில் குணப்படுத்த முடியும் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றை மூன்று நாட்களில் குணப்படுத்த முடியும் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் 160 பேருக்கு குறைந்த நாட்களில் சித்த மருத்துவத்தின் மூலம், குணம் ஏற்பட்டுள்ளதால், சென்னை மாநகரப்பகுதியில் உள்ள அனைத்து கோவிட் கேர் மையங்களையும், தங்களுக்கு ஒப்படைத்தால், தங்களது மருத்துவர்கள், சிகிச்சையளிக்க தயாராக இருப்பதாக தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (National Institute of Siddha)தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தேசிய சித்த மையம் வருகிறது. இந்த மருத்துவத்தின் மூலம், சென்னையில் உள்ள 160 நோயாளிகளுக்கு 3 நாட்களில் சிகிச்சையின் மூலம் குணமாக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்த நாட்களிலேயே, கொரோனா பரவலை பெருமளவு குறைத்து, பல்வேறு பகுதிகளை பாதுகாப்பான பகுதிகளாக மாற்றியுள்ளது. கொரோனா தொற்றுக்கு, சித்த மருத்துவத்தின் மூலம் எளிய வகையில் தீர்வு கிடைப்பதால், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கொரோனா மையங்களையும் தங்களிடம் ஒப்படைத்தால், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தங்களது சித்த மருத்துவர்கள் தயாராக இருப்பதாக, தேசிய சித்த மருத்துவ நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றின் பாதிப்பிற்கேற்ப 3 வகையான சித்த மருந்துகள் தங்களிடம் தற்போது கைவசம் உள்ளதாகவும், மேலும் இந்த மருத்துவத்தில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தற்போது தங்களது இந்த மருந்துகளே, கொரோனா தொற்று பாதிப்பை எளிதில் குணமாக்கும் திறன் கொண்டவையாக இருப்பதாக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார். 

தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளுடன் ஒப்பிடுகையில், சித்த மருந்துகள் விலை குறைவாக உள்ளதோடு மட்டுமல்லாது. அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 

எனவே, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் உள்ள கொரோனா மையங்களை தங்களது கட்டுப்பாட்டிற்கு தந்தால், தாங்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...