கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பர்லி மைதானத்தில் விளையாடியவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து மைதானத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பர்லி மைதானத்தில் விளையாடியவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து மைதானத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பர்லி மைதானத்தில் விளையாடுவதற்கு பலமுறை கண்டித்தும் கட்டுபாடுகளை மீறி இளைஞர்கள், சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து சமூக விலகல் இல்லாமல் விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிவர்கள், கூட்டம் சேர்ந்தவர்கள் என 200 பேரை காவல்துறையினர் உதவியுடன் தெற்கு வட்டாட்சியர் அருள் முருகன் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் அனைவரையும் மடக்கி பிடித்து மைதானத்தில் அமர வைத்தனர்.

பின்னர் அவர்களிடம் கொரோனா நோய்த்தொற்று குறித்தும் தினமும் எவ்வளவு பாதிப்பு கொடுக்கிறது. அந்த நோய் மூலம் பாதிக்கப்படக் கூடியவர்கள் என அதில் இருந்து நம்மை பாதுகாத்து கூடியது குறித்து பாடம் எடுத்தார். பிறகு மைதானத்தின் நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் இளைஞர்கள் மைதானங்களிலும், பொதுவெளியில் தொடர்ந்து கிரிக்கெட், புட்பால் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருவதன் மூலமாக வேகமாக நோய் தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்படும். அப்படி யாராவது ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மற்றும் அவர் வீட்டில் அருகில் இருப்பவர்களுக்கு என நோய் தொற்று மிக வேகமாகப் பரவும். இதை தவிர்க்க வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து மாஸ்க் அணிந்து சமூக விலகலை மேற்கொண்டு பொது வெளியில் செல்ல வேண்டும் என தெற்கு வட்டாட்சியர் அருள் முருகன் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், அதிரடியாக மைதானத்தில் காவல்துறையினருடன் புகுந்து அனைவரையும் ஒரே நேரத்தில் சிறை பிடித்து தரையில் அமரவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வட்டாட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.