கோவையில் கெட்டுப்போன ரொட்டிகளை விற்பனை செய்த பேக்கரிக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்! கெட்டுப்போன ரொட்டிகள் பறிமுதல்!

கோவை: கோவை மசக்காளிபாளையம் சாலையிலுள்ள பேக்கரியில் கெட்டுப்போன ரொட்டியை விற்பனை செய்ததாக கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கெட்டுப்போன ரொட்டிகளை பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை மசக்காளிபாளையம் சாலையிலுள்ள பேக்கரியில் கெட்டுப்போன ரொட்டியை விற்பனை செய்ததாக கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கெட்டுப்போன ரொட்டிகளை பறிமுதல் செய்தனர். 

கோவை ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையிலுள்ள, கோவை கஃபே என்ற பேக்கரியில் கடந்த வாரம் அப்பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஒரு ரொட்டி பாக்கெட்டை வாங்கி உள்ளார். அந்த ரொட்டியை வீட்டில் வைத்து அடுத்த நாள் காலை பிரித்து பார்த்தபோது கெட்டு போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகுவிடம் தெரிவித்தார். பின்னர் இருவரும், கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர், தமிழ்செல்வனிடம் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பேக்கரியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது கடையில் வைக்கப்பட்டிருந்த ரொட்டி காலாவதியானது கண்டறியப்பட்டது. மேலும் கடையை ஆய்வு செய்த பொழுது கடையில், உணவுப்பொருள் தயாரிக்கும் இடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும் கடை ஊழியர்கள் கையுறை அணியாமல் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து, அங்கிருந்த கெட்டுப்போன ரொட்டிகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு நோட்டீஸ் வழங்கினர். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...