கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது - 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்!

கோவை: கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

கோவை இராமநாதபுரம் அருகே நேற்று இரவு ஒருவர் கஞ்சா விற்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அபிலாஷ் என்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை சோதனையிட்ட போது அவரிடம் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பள்ளிகள் அதிகம் உள்ள ராமநாதபுரம் பகுதியில் இளைஞர் அபிலாஷ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளதால் அவருக்கு எங்கிருந்து கிடைக்கப் பெறுகிறது, வேறு யாரேனும் இவருடன் கூட்டாளிகளாக உள்ளனரா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சமீப காலமாக கோவை பகுதியில் நூதன முறையில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பள்ளி மாணவர்கள், பெண்கள், ஆண்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...