கோவை மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் 2வது நாளாக தீவிர வாகன சோதனை..! 54 வாகனங்கள் பறிமுதல்!

கோவை: கோவை மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் இரண்டாவது நாளாக மேற்கொண்ட வாகன சோதனையில் இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் வர முற்பட்ட மற்றும் அதிகப்படியான நபர்களை ஏற்றி வந்த 54 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் இரண்டாவது நாளாக மேற்கொண்ட வாகன சோதனையில் இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் வர முற்பட்ட மற்றும் அதிகப்படியான நபர்களை ஏற்றி வந்த 54 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. 

கொரோனா பரவுவதை தடுக்க சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா இ.கா.ப., கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், இ.கா.ப., ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், இ.கா.ப., அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளிலும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று கோவை மாவட்ட எல்லையான தெக்கலூர் எஸ். பி.அப்பரல்ஸ் அருகே அமைந்துள்ள சோதனை சாவடியில் இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் நுழைய முற்பட்ட 4 கார்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் அதிகப்படியான நபர்களை ஏற்றி வந்த 21 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல் இன்று இரண்டாவது நாளாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெக்கலூர் எஸ். பி.அப்பரல்ஸ், கஞ்சபள்ளி, வாளையார், காங்கேயம்பாளையம், கோபாலபுரம் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள சோதனை சவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சோதனை சாவடிகளில் பணியில் இருந்த காவலர்களுக்கு face shield உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்கி தீவிர சோதனையை முடுக்கி விட்டதின் பேரில் இ - பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் வர முற்பட்ட 16 நான்கு சக்கர வாகனங்களும், 8 இரண்டு சக்கர வாகனங்களும் விதிமுறைகளை மீறி அதிகப்படியான நபர்களை ஏற்றி வந்த 29 நான்கு சக்கர வாகனங்களும் 1 இரண்டு சக்கர வாகனமும் ஆக மொத்தம் 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்பதால் பொதுமக்கள் இது போன்ற அத்துமீறல்களை தவிர்க்குமாறு கோவை மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...