பெற்றோர் என்னை கடத்தவில்லை என கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் போலீசாரிடம் வாக்குமூலம்

கோவை: கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண் கடத்தல் வழக்கில், அவர்களது பெற்றோர்கள் என் மனைவியை மிரட்டி கடத்தவில்லை என பொய் வாக்குமூலம் கொடுக்க வைத்திருப்பதாக பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

கோவை: கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண் கடத்தல் வழக்கில், அவர்களது பெற்றோர்கள் என் மனைவியை மிரட்டி கடத்தவில்லை என பொய் வாக்குமூலம் கொடுக்க வைத்திருப்பதாக பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

கோவையில் துடியலூர் இடையர்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் திருச்சியை சேர்ந்த சக்தி தமிழனி பிரபா என்பவரும் கடந்த 5 ம் தேதி கோவையில் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். கார்த்திகேயனின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், சக்தி தமிழ் பிரபாவின் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்திகேயனின் வீட்டில் தம்பதியர் வசித்து வந்த போது, கடந்த 20 ம் தேதி அவர்களது வீட்டிற்கு வந்த சக்தி தமிழினி பிரபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கார்த்திகேயனையும் அவரது தாயார் வசந்தகுமாரியையும் தாக்கி விட்டு பெண்ணை காரில் கடத்தி சென்றனர். மேலும், அவர்களை தாக்கிய காட்சிகள் வெளியாகியிருந்தது.

இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து கார்த்திகேயன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் துடியலூர் காவல் துறையினர் சக்தி தமிழினி பிரபாவின் பெற்றோர் மீது கொலை மிரட்டல், கடத்தல் உட்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும், இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் திருச்சிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தன்னை தனது பெற்றோர் கடத்தவில்லை என சக்தி தமிழினி பிரபா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தனிப்படை போலீசார் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, புதன்கிழமை கோவை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கார்த்திகேயன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தமிழினி பிரபாவின் தந்தை சுந்தராஜன் ஓய்வுபெற்ற டிஎஸ்பி என்பதால் அவர்களை கைது செய்யாமல் கோவை துடியலூர் காவல்துறையினர் மென்மையான போக்கை கடைபிடிப்பதாகவும் சக்தி தமிழினி பிரபாவை கட்டாயப்படுத்தி மிரட்டி பெற்றோர் கடத்தவில்லை என கூற வைத்திருப்பதாக புகார் அளித்துள்ளார்.

மேலும், தனக்கும் தனது தாய் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...