கோவை: கோவை மசக்காளிபாளையம் சாலையிலுள்ள பேக்கரியில் கெட்டுப்போன ரொட்டியை விற்பனை செய்ததாக கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையிலுள்ள, கோவை கஃபே என்ற பேக்கரியில் கடந்த வாரம் அப்பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஒரு ரொட்டி பாக்கெட்டை வாங்கி உள்ளார். அந்த ரொட்டியை வீட்டில் வைத்து அடுத்த நாள் காலை பிரித்து பார்த்தபோது கெட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகுவிடம் தெரிவித்தார். பின்னர் இருவரும், கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர், தமிழ்செல்வணிடம் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது கடையில் வைக்கப்பட்டிருந்த ரொட்டி காலாவதியானது கண்டறியப்பட்டது. மேலும் கடையை ஆய்வு செய்த பொழுது கடையில், உணவுப்பொருள் தயாரிக்கும் இடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும் கடை ஊழியர்கள் கையுறை அணியாமல் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளனர்.
சோதனையை அடுத்து, அங்கிருந்த கெட்டுப்போன ரொட்டிகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தபட்ட பேக்கரிக்கு நோட்டீஸ் வழங்கினார்கள்.