கோவை: கோவையில் படிக்க சொல்லி தந்தை திட்டியதால் மனமுடைந்து மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் படிக்க சொல்லி தந்தை திட்டியதால் மனமுடைந்து மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பாப்பநாய்க்கன் பாளையம் என்.ஜி.ராமசாமி வீதியை சேர்ந்தவர் சேது நாராயணன். இவரது மகள் கனிஷ்கா(16) மணி மேல்நிலைப் பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் 10ம் வகுப்பிற்கு படிக்க வேண்டிய பாடங்கள் குறித்து மாணவர்களின் வாட்ஸ் அப் குரூப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அடிக்கடி தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருந்த மகளை பெற்றோர்கள் படிக்க சொல்லி அறிவுறுத்தினர். இதனால் மனமுடைந்த பள்ளி மாணவி கனிஷ்கா தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து கனிஷ்காவின் தந்தை சேதுநாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பந்தய சாலை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படிக்க சொல்லி பெற்றோர்கள் கூறியதால் தூக்கு மாட்டி பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.