கோவை: கோவையில் தபால் நிலைய பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூர் அருகில் உள்ள தேவராயபுரம் தபால் நிலையத்தில் பூட்டை உடைத்து 5,035 ரூபாய் பணம் மற்றும் பென் டிரைவ்களை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
கடந்த 20ம் தேதி பணிகள் முடிந்த பின்னர் போஸ்ட் மாஸ்டர் கலைமணி மற்றும் போஸ்ட் மேன் ராமசந்திரன் ஆகியோர் கதவை பூட்டி வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், நேற்று அலுவலகம் வந்த போது அலுவலகத்தின் முன் கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உள்ளே சென்று பார்க்கையில் பணம் மற்றும் பென் டிரைவ்களை திருடு போய் உள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து காவல்துறை மற்றும் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து, தெற்கு தபால் ஆய்வாளர் பழனி அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.