கோவை ஆனைகட்டியில் வாயில் காயத்துடன் தவித்து வந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை: கோவை ஆனைகட்டியில் வாயில் காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் தவித்து வந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.


கோவை: கோவை ஆனைகட்டியில் வாயில் காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் தவித்து வந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. 

கோவை ஆனைக்கட்டி பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டதால் உணவு உண்ண முடியாமல் தவித்து வந்த நிலையில் 2 நாட்களாக பழங்களினுள் மாத்திரைகள் வைத்து வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் சிகிச்சைகள் அளித்து வந்தனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வரை சிகிச்சை அளிக்கப்பட்டதில் நேற்று காலை சுமார் 9 மணி வரை அப்பகுதியில் சுற்றி வந்தது. ஆனால், 9 மணிக்கு மேல் மிகவும் சோர்வடைந்து கீழே படுத்து விட்டது. எனவே ஊசிகள், மருந்துகள் மூலம் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று சிறிதளவு மட்டுமே உடல்நலம் தேறிய நிலையில் மேலும் சோர்வடைந்தது. 

இதையடுத்து, வனத்துறையினர் மற்றும் சுகுமார் தலைமையில் மருத்துவர் குழு வந்து சுமார் 25 பாட்டில்கள் குளுக்கோஸ் மற்றும் சத்து நிறைந்த மருந்துகள், எதிர்ப்பு சக்தி மருந்துகள், வலி நிவாரணிகள் போன்றவற்றை ஊசிகளின் மூலம் வழங்கினர். நேற்று முன்தினம் இருந்ததை விட நேற்று யானையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதென மருத்துவர் குழு தெரிவித்திருந்தனர். 10 நாட்களுக்கு முன் மூங்கில் அல்லது மரத்தின் உச்சி குத்தி சீல் பிடித்ததால் இந்த நிலைமை ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை யானை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த சில மாதங்களில் கோவை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகங்களில் 7 காட்டு யானைகள் இறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...