கோவையில் வாலிபர் சங்க ரத்ததான முகாமினை எம்.பி ஆர்.நடராஜன் துவக்கி வைப்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கோவை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாமை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இன்று துவக்கி வைத்தார்.

கோவை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கோவை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாமை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இன்று துவக்கி வைத்தார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகளுக்காகவும்,விபத்து உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது. எனவே பேரிடர் காலத்தின் அவசியத்தை உணர்ந்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரத்ததான முகாம்களை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வாலிபர் சங்கத்தின் கோவை கிழக்கு மற்றும் சிங்கை நகரக்குழுக்களின் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமினை கோவை எம்பி நடராஜன் துவக்கிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய எம்பி நடராஜன், சாதாரண காலத்தில் இரத்ததானம் அளிப்பது என்பதை காட்டிலும் பேரிடர் காலத்தில் அதுவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வெளியே வருவதற்கு அச்சப்பட்டுள்ள சூழலில் இத்தகைய முகாம்கள் மிக அவசிய மற்றும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இதனை உணர்ந்த காரணத்தினாலே வாலிபர் சங்கத்தினர் கடந்த மூன்று மாத காலத்திலே மட்டும் நான்கு முகாம்களை நடத்தி ஒவ்வொரு முகாம்களிலும் நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்று இரத்ததானம் செய்து வருகின்றனர். 

இந்த சீரிய பணி தொடர வேண்டும். மேலும் இதேபோல மக்களின் மீது அக்கறையுள்ள அனைத்து அமைப்புகளும் இரத்த தான முகாம்களைநடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து முகாமில் பங்கேற்று இரத்ததானம் செய்த இளைஞர்களின் இரத்தங்களை கோவை அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவக்குழுவின் சேகரித்து வைத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...