திருப்பூரில் புதிதாக 4 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று வரை 59 ஆயிரத்து 377 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் கொரோனாவின் பரவல்குறைவாக இருந்த மாவட்டமான திருப்பூர் மற்றும் கோவையில் தொடர்ந்து பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இன்று சென்னையிலிருந்து திருப்பூர்( 2), காங்கேயம் (1), பல்லடத்திற்கு(1) ஆகிய பகுதிகளுக்கு வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பாதிப்பின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, இன்று புதிதாக 304 பேர் உட்பட 1737 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் 122 பேர் 14 நாட்கள் வீட்டுக்கண்காணிப்பினை வெற்றிக்கரமாக முடித்துள்ளனர்.
இந்த நிலையில், மேலும் கொரோனா தொற்று மாவட்டத்தில் அதிகரிக்காத வகையில் பல்வேறு தடுப்புநடவடிக்கைகளை ஆட்சியர் விஜய கார்த்திக்கேயன் மேற்கொண்டு வருகிறார்.