வால்பாறையில் இனிமேல்  காலை 7 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே கடைகள் இயக்க அனுமதி - வட்டாசியர் உத்தரவு

வால்பாறையில் இனிமேல்  காலை 7 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே கடைகள் இயக்க அனுமதி - வட்டாசியர் உத்தரவு

கோவை: கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதால் வால்பாறையில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இனிமேல்கடைகள் இயக்கப்படும் என வியாபாரிகள் - வட்டாட்சியர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் கடைகள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் 5 ஆம் கட்ட ஊரடங்கில், சில தளர்வுகள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 வரை கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது .



இந்த நிலையில் மீண்டும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வால்பாறையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை திறப்பதற்கான அனுமதி நேரம் குறைக்க வேண்டும் எனமுடிவு எடுக்கப்பட்டது. 

அதன்படி, இன்று வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜா , காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் இயங்கவேண்டும் எனவும்,கடைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்என்றுமுடிவெடுக்கப்பட்டது. 



மேலும் அரசு பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகளிடம்,வியாபாரிகள் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, இது சம்பந்தமாக அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதியளித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...