கோவையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு..!
கோவை: கோவை போத்தனூர் அருகே 11 வயது பள்ளி சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த மூன்று பத்தாம் வகுப்பு சிறுவர்கள் மீதுபோத்தனூர் போலீஸார்போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறது. அச்சிறுமிக்கு தாய் இல்லாததால், தந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக சிறுமி மிகவும் பயந்து பதற்றமான நிலையில் இருந்ததாக தெரிகிறது, இதையடுத்து சிறுமியிடம் தந்தை விசாரித்த போது, அவர்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளரின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் அவன் இரு நண்பர்களுடன் சேர்ந்து
அச்சிறுமியை பல முறை தொடர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியிடம், அந்த மூன்று சிறுவர்களும் அவர்களின் மொபைல் போன்களில் ஆபாச வீடியோ காட்சிகளை பார்க்கும் படி வற்புறுத்தியதாக தெரியவந்துள்ளது. வீட்டில் சிறுமியின் தந்தை இல்லாத நேரத்தில், அவர்கள் மூவரும் கடந்த ஒரு வாரமாக சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்ப்படுத்தியுளனர்.
இதையடுத்து, சிறுமியின் தந்தை போத்தனூர் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மூன்று சிறுவர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, விசாரணைக்கு பிறகு அச்சிறுமி வசிக்கும் வீட்டின் உரிமையாளரின் மகன் மற்றும் அவனின் இரு நண்பர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், அதில் ஒரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.