கோவையில் உள்ள புறவழிச்சாலை மேம்பாலத்தில் பயன்படுத்தப்பட்ட பிபிஇ கிட், கையுறை..! மக்கள் அதிர்ச்சி..!

கோவை: கோவையில் உள்ள புறவழிச்சாலை மேம்பாலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பயன்படுத்தும் முழுக்கவச ஆடைகளை மர்மநபர்கள் பல்வேறு பகுதிகளில் சொருகி சென்றுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் உள்ள புறவழிச்சாலை மேம்பாலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பயன்படுத்தும் முழுக்கவச ஆடைகளை மர்மநபர்கள் பல்வேறு பகுதிகளில் சொருகி சென்றுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர், நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகத்துக் கொள்ள உடல்முழுவதையும் மறைக்கும் பிபிஇ கிட்களை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் முககவசம், பிபிஇ கிட், கையுறை போன்றவற்றை பயன்படுத்திய, பின்னர் பாதுகாப்பாக அப்புறப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டலின் படி நமது சுகாதாரத்துறை பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.



ஆனால், இன்று உக்கடம்- சுங்கம் செல்லும் மேம்பாலத்தின் ஓரங்களில் பிபிஇ கிட் என்ற முழு கவச ஆடைகள் மர்மமான முறையில் சொருகி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த பொதுமக்கள் நோய் தொற்றுக்கு உள்ளாக்கும் துணிகள் எப்படி இங்கு வந்தது என ஆவேசம் அடைந்தனர்.



இதைத் தொடர்ந்து காவல் துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் பொதுமக்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வந்த உக்கடம் போலீசார் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஆடைகள் எப்படி இங்கு வந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல, இதை அப்புறப்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...