கோவை மாவட்டத்தை சேர்ந்த நான்கு கல்லூரி மாணவர்கள் பவானி அணை நீர் தேக்க பகுதியில் நீரில் மூழ்கி பலி..!

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் நீரில் மூழ்கி நான்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் நீரில் மூழ்கி நான்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் உள்ள சித்தன்குட்டை பகுதிக்கு கோவை மாவட்டம், அன்னூரை சேர்ந்த பிரனேஷ் (20) கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பி இ படித்து வரும் மாணவன், இவரது நண்பர்கள் - கதிரேசன் (20) பண்ணாரி அம்மன் கல்லூரியில் பிஇ படித்து வருகிறார், ரகுராம் (20) கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார், யாஸ்வந்த் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார் மற்றும் இவர்களின் நண்பர் சுரேஷ் ராஜ் எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரி மாணவன், இவர்கள் 5 பேரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை 144 தடை விதிக்கப்பட்டதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இவர்கள் இன்று காலை 9 மணி அளவில் கோவிலுக்கு செல்வதாக அவர்களது பெற்றோரிடம் கூறிவிட்டு, ஐவரும் இருசக்கர வாகனத்தில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கம் பகுதியான சித்தன் குட்டை பகுதியில் உள்ள நீர்தேக்க பகுதியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

அங்கு அனை பகுதியில் குளித்து கொண்டு இருக்கும் போது, ரகுராம் பிரனேஷ், கதிரேசன், யாஸ்வந்த் ஆகிய 4 பேரும் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றனர். இதை பார்த்த சுரேஷ் ராஜ் அணை நீரில் இருந்து வெளியேறி கரைக்கு வந்தார், அதை தொடர்ந்து நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ்ராஜ் அருகில் இருந்த மீனவர்கள் உடனடியாக உதவிக்கு அழைத்தார்

சம்பவ இடத்திற்கு பொது மக்கள் மற்றும் மீனவர்கள் வந்து பார்த்த போது நான்கு பேரையும் காணவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி இருக்கக்கூடும் என்பதால் இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், அங்குள்ள மீனவர்கள் துணையுடன் சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு 4 பேரின் உடல்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...