சென்னையில் இருந்து கோவைக்கு ஊழியர்களை அழைத்து வந்து விற்பனையில் ஈடுபட்ட GRT நகைக்கடை மீது வழக்கு - 30 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை!

கோவை: சென்னையில் இருந்து 30 ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து அரசு வழிகாட்டுதலை மீறி விற்பனையில் ஈடுபட்ட GRT நகைக்கடை மீது வழக்குப்பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை: சென்னையில் இருந்து 30 ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து அரசு வழிகாட்டுதலை மீறி விற்பனையில் ஈடுபட்ட GRT நகைக்கடை மீது வழக்குப்பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அங்கு பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து நகை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, நகைக்கடைக்கு வந்த போலீசார், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.



அப்போது, சென்னையில் பணியாற்றிய 30க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஊரடங்கு காரணமாக கோவையில் உள்ள ஜிஆர்டி நகைக்கடையில் பணி புரிவதற்காக அனுமதியின்றி அழைத்து வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.



இதனையடுத்து, அந்நிறுவனத்தின் 3 தளங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட 30 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவு நாளை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 30 ஊழியர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், அரசு வழிகாட்டுதலை மீறி அதிகமான பணியாளர்களை கொண்டு இயங்கியதாக GRT நகைக்கடை மேலாளர் மற்றும் 39 ஊழியர்கள் மீது காட்டூர் காவல் நிலையத்தில் 188, 269, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...