கோவை: கோவையில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் சில்லறை மீன் மார்க்கெட் மூடப்படுகிறது.
கோவை: கோவையில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் சில்லறை மீன் மார்க்கெட் மூடப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் சமீப நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் முக கவசங்கள் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அவ்வாறு கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் இயங்கி வரும் சில்லறை மீன் மார்கெட்டை மக்கள் அதிகம் மீன் வாங்க வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூட முடிவெடுத்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், சில்லறை மீன் மார்க்கெட்டில் 68 கடைகள் இயங்கி வருவதாகவும் கேரளா, கன்னியாகுமரி, ராமேஸ்வரம்,
தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து மீன்கள் வரத்து பெறப்பட்டு இங்கு சில்லறை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்தனர்.
தினசரி 50 கிலோ முதல் 100 கிலோ வரை இங்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் மீன் விற்பனை இருக்கும் எனவும் மீன் வாங்க மக்கள் அதிகம் வரும் நிலையில் கொரோனா தொற்று காரணமாக மக்கள் நலன் கருதி விற்பனையை நிறுத்தி வைக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் மற்ற நாட்களில் சமூக இடைவெளியை பின்பற்றி மீன்கள் வாங்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.