திருப்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் இருசக்கர வாகனத்திற்கு பாடைகட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் இருசக்கர வாகனத்திற்கு பாடைகட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் கடுமையாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து பாடை கட்டியும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நான்கு சக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மத்திய அரசு ஊரடங்கு காலத்திலும் பொது மக்களை வஞ்சிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வருவதாக குற்றம்சாட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர்.