கோவை: கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத மக்களிடம் இருந்து தற்போது வரை ரூ. 9.55 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத மக்களிடம் இருந்து தற்போது வரை ரூ. 9.55 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வேண்டி, பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி மக்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே நடமாடி வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று எளிதில் மற்றவர்களுக்கு பரவுகிறது.
இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கோவை மாவட்டத்தில் முக கவசம் இன்றி வந்தால் ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் சமூக இடைவெளியின்றி இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது வரை முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 9.55 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.