கோவை: கோவையில் கொரோனா பாதிப்பு காரணமாக சின்னியம்பாளையம் பகுதியில் கடைகளும், தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தில் பூ மார்க்கெட் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சின்னியம்பாளையம் பகுதியில் கடந்த 3 நாட்களில் 21 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சின்னியம்பாளையம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே வர முடியாத படி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மார்க்கெட் கடைகள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தில் மாநகராட்சி நிர்வாகம் கடைகளை அடைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் செல்ல முடியாதபடி சிமெண்ட் சீட்டுகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.