கோவை சூலூர் பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆதரவற்றோர் இல்ல வாலிபர் கைது!

கோவை: கோவை அடுத்த சூலூரில் ஹார்டுவேர்ஸ் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவை அடுத்த சூலூரில் ஹார்டுவேர்ஸ் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியில் உள்ள வெங்கடேஷ் என்பவரது ஹார்டுவேர்ஸ் கடையில் கடந்த 8ம் தேதி 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது. இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து

விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று தென்னம்பாளையம் பகுதியில் நின்றிருந்த ஒரு வாலிபரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் தான் ஒரு ஆதரவற்றோர், பெயர் காசி (19) என்பதும் தனது தந்தை தான் சிறுவனாக இருக்கும் போதே இறந்து விட்டதால் தாய் தன்னை அனாதையாக விட்டு சென்று விட்டதாக தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தாக கூறிய அவர், கடந்த ஓராண்டுக்கு முன் திருப்பூருக்கு வந்ததாக கூறியுள்ளார்.

திருப்பூரில் இருந்து பல்வேறு திருட்டுகளை செய்துள்ளதாகவும் தன்மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த 8ம் தேதி நீலாம்பூர் பகுதியில் உள்ள கடையில் மேற்கூறையை உடைத்து 4 லட்சத்து 50 ஆயிரம் திருடியதாகவும் அதில் ஜாலியாக 22 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவரிடமிருந்து 4 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்த போலீசார் அவரைக் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...