கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
குறிப்பாக, கொரோனா தொற்று அதிகம் உறுதி செய்யப்பட்டுள்ள டெல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக கோவை வருபவர்கள் அதிகரித்துள்ளதால் கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில், கோவையில் இன்று மேலும் புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு :-
சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண்ணுக்கு தொற்று உறுதி.
மயிலம்பட்டியை சேர்ந்த 1 ஆண், 1 பெண்ணுக்கு தொற்று உறுதி.
தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த 1 ஆண்.
உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த 1 ஆண், 1 பெண்ணுக்கு தொற்று.
சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த 1 ஆண்.
போத்தனூர் பகுதியை சேர்ந்த 1 பெண்.
சித்தன்னபுரம் பகுதியை சேர்ந்த 1 ஆண்.
கணுவாய் பகுதியை சேர்ந்த 1 பெண்.
சமத்தூர் பகுதியை சேர்ந்த 1 ஆண்
நடுப்புனியை சேர்ந்த 1 பெண்.
ஆனைமலை சுங்கம் பகுதியை சேர்ந்த 1 பெண்.
சுப்பேகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த 1 ஆண்.
ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 1 ஆண் என மொத்தம் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்தடுத்து 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆர்.ஜி.புதூர் ராமர் கோயில் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அப்பகுதியில் மொத்தம் 10 வீடுகளில் 26 பேர் வசித்து வரும் நிலையில், 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.