கோவையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடைபெறும் மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நா.கார்த்திக் எம்எல்ஏ வேண்டுகோள்!

கோவை: கோவையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடைபெறும் குனியமுத்தூர் பேருந்து நிறுத்தம் மற்றும் இடையர்பாளையம் மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு நா.கார்த்திக் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: கோவையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடைபெறும் குனியமுத்தூர் பேருந்து நிறுத்தம் மற்றும் இடையர்பாளையம் மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு நா.கார்த்திக் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த 05.05.2020 அன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் 07.05.2020 முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என்றும் மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு நபருக்கும், இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்பட வேண்டும். மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. மதுபானக் கூடங்கள் (பார்) திறப்பதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், தமிழக அரசின் விதிமுறைகளுக்கு மாறாக கோவை தொண்டாமுத்தூர் தொகுதி குனியமுத்தூர் பேருந்து நிறுத்தம் காமராஜர் மன்றம் அருகில் அமைந்துள்ள மதுபானக் கூடத்திலும்(பார்) இடையர்பாளையம், மணல் மார்கெட் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண் 1751ல் உள்ள மதுபானக் கூடத்திலும் (பார்) மது வழங்கப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய்தொற்று என்பதால் இதைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் தந்து வருகின்றனர்.

இந்நிலையில், சட்டத்திற்கு புறம்பாக சிறிதும் சமூக இடைவெளியின்றி, ஒரே நேரத்தில் 5 பேர்களுக்கு மேல் கூடியும் மேற்கண்ட மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே, கோவையில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி மக்களிடையே ஏற்படுத்திவரும் பாதிப்பும் - இழப்பும், அச்சம் தருவதாக உள்ளது. இந்த நிலையில் இது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களால் நோய்த் தொற்று கடுமையாக பரவும் அபாயம் உள்ளது.

ஆகவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் , மேற்கண்ட மதுபானக் கூடங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து , பொதுமக்களை நோய்த் தொற்று பரவலில் இருந்து காப்பாற்றும்படி கேட்டுக்கொள்வதாக நா.கார்த்திக் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...