கோவை: மேட்டுப்பாளையத்தில் சுறுக்கு கம்பியில் மாட்டி காயமடைந்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று விவசாய தோட்டத்தினுள் படுகாயமடைந்த நிலையில் கண்டறியப்பட்டது.
சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட சென்னாமலை கரடு பகுதியில் இருந்த அந்த சிறுத்தை மர்ம நபர்கள் வைத்த சுறுக்கு கம்பியில் மாட்டி வயிறு, மார்பு, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிறுத்தையை வனத்துறையினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும், கோவையில் இருந்து சிறப்பு வனத்துறை கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆண்டிபயாடிக், குளுக்கோஸ், வைட்டமின் என அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிறுத்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது வன ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சிறுத்தையின் உயிரிழப்புக்கு காரணமான சுறுக்கு கம்பிகளை வைத்தவர்கள் யார் என சிறுமுகை வனத்துறையினர் தோட்டம் தோட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.