கோவையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அமமுக பெண் பிரமுகர் கைது - 4 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை: கோவையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அமமுக பெண் பிரமுகரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அமமுக பெண் பிரமுகரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் அவ்வப்போது போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை வடவள்ளி அருகே உள்ள குருசாமி நகரில் நேற்று இரவு வடவள்ளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி காரில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனை மேற்கொண்டனர்.



அப்போது, அந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த பெண்மணியிடம் விசாரணை மேற்கொண்டபோது, திருப்பூர் மாவட்டம் நம்பியாம்பாளையத்தை சேர்ந்த ஜெயமணி என்பதும் அமமுகவை சார்ந்த பெண் பிரமுகரான இவர் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



அரசியல் பிரமுகர் ஒருவர் கஞ்சா கடத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் பல்வேறு போலியான அடையாள அட்டைகளை வைத்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...