சென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் தங்கியிருந்த பகுதியில் தடுப்புகள் போடப்பட்டுள்ளது

திருப்பூர்: சென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் தங்கியிருந்த தெரு நுழைவாயிலில் மாநகராட்சி சார்பில் தடுப்புகள் போடப்பட்டு, போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்: சென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் தங்கியிருந்த தெரு நுழைவாயிலில் மாநகராட்சி சார்பில் தடுப்புகள் போடப்பட்டு, போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்து நகர் இரண்டாவது பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று கோவை மார்க்கமாக திருப்பூர் வந்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தப்பட்டனர். இன்று, பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அந்த வீட்டில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் சுகாதாரத் துறையின் சார்பில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



மேலும், அவர் தங்கியிருந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

அதேபோல், அவருடன் வந்த அவரது கணவர் மற்றும் குழந்தைக்கு முதல் கட்ட சோதனையில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...