நீலகிரியில் புதிதாக எட்டு பேருக்கு கொரோனோ தொற்று உறுதி..! தேவையற்ற பயணம் மேற்கொள்வோர் மீது நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக எட்டு பேருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பேருந்து பயணங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தேவையற்ற பயணங்களை மேற்கொள்வோர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக எட்டு பேருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பேருந்து பயணங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேவையற்ற பயணங்களை மேற்கொள்வோர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் இன்றைய நாள் வரை சுமார் 8 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் உதகை அருகே உள்ள குளிச்சோலை பகுதியில் ஐந்து பேரும் குன்னூர் வண்ணாரப்பேட்டை ஒருவரும் தைமலைப் பகுதியில் ஒருவரும் தும்மனட்டி பகுதியில் ஒருவரும் என மொத்தம் எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல, தற்போது அரசு ஓர் மண்டலத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் சென்று வரலாம் என்று கூறியதை பொது மக்கள் தவறாக எடுத்துக்கொண்டு சென்று வருகின்றனர் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே சென்றுவர வேண்டும் எனவும் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள கூடாது என்றார்.

மேலும், கொரோனா இல்லாத மாவட்டமாக நீலகிரி திகழ பொதுமக்களுடைய ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றும், சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவது உறவினர்களை பார்க்கச் செல்வது என இதுபோன்ற பயணங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சுபநிகழ்ச்சிகளை நடத்துவோர் மற்றும் அதில் கலந்து கொள்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...