திருப்பூர்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவத்தில் துணை காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேவம்பாளையம் பகுதியில் லோகநாதன் என்பவர் வீட்டு ஆட்டுக்குட்டி வேறு சமூகத்தினரின் தோட்டத்தில் மேய்ந்ததால் அச்சமூகத்தினர் லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வற்புறுத்தியுள்ளனர். அதனை மறுத்த லோகநாதன் குடும்பத்தினர் மீது சாதிய ரீதியிலான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவிநாசி காவல் நிலையத்தில் லோகநாதன் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத அவிநாசி காவல்துறையினர் லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது சட்டத்திற்கு புறம்பான செயல் எனவும் இதன் மீது துணை காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் குழுமம் சார்பில் இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.