கோவை: லடாக்கில் இந்திய எல்லையில் அத்துமீறிய சீன நாட்டின் கொடி மாதிரிகளை கிழித்தும் சீனா போன்களை உடைத்து கோவையில் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: லடாக்கில் இந்திய எல்லையில் அத்துமீறிய சீன நாட்டின் கொடி மாதிரிகளை கிழித்தும் சீனா போன்களை உடைத்து கோவையில் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய சீன எல்லையில் இந்திய சீனா படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் தமிழக வீரர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்திய- சீனா எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், சீனாவை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது, சீனா கொடி மாதிரிகளை எரிக்க முற்பட்டவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி அவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சீன செல்போன்களை தரையில் போட்டு உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் சீன ராணுவ வீரர்களை கண்டித்தும் சீன தேசத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் சக்தி சேனா அமைப்பின் சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.