கோவையில் வீடு விடாக சென்று மாணவர்களிடம் கல்லூரியில்‌ சேர பரப்புரை செய்யக் கோரி ஆசிரியர்களை கட்டாயப்படுத்திய ஏசிடி கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

கோவை: கோவையில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீடு விடாக சென்று மாணவர்களிடம் கல்லூரியில்‌ சேர பரப்புரை செய்யக் கோரி ஆசிரியர்களை கட்டாயப்படுத்திய ஏசிடி கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க AIPCEU ஆசிரியர்‌ கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவையில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீடு விடாக சென்று மாணவர்களிடம் கல்லூரியில்‌ சேர பரப்புரை செய்யக் கோரி ஆசிரியர்களை கட்டாயப்படுத்திய ஏசிடி கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க AIPCEU ஆசிரியர்‌ கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. எனினும், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தற்போது கோவை மாவட்டத்திலும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கோவை மாவட்டத்தில்‌ 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்‌, கோவையில் இயங்கி வரும் ஏசிடி (ARJUN COLLEGE OF TECHNOLOGY) கல்லூரியின்‌ நிர்வாகம்‌ கல்லூரி முதல்வர்‌ குருலிங்கம்‌ முன்னிலையில்‌, தனது கல்லூரி ஆசிரியர்களை கிராமம்‌ கிராமமாக, வீடு விடாக சென்று மாணவர்களை கல்லூரியில்‌ சேர பரப்புரை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர்‌.

அவ்வாறு பரப்புரை செல்ல வீடு விடாக செல்லும்‌ ஆசிரியர்கள்‌, புகைப்படம்‌ மூலம்‌ அவர்கள்‌ பயணம்‌ மேற்கொள்ளும்‌ Location-ஐ உறுதி செய்ய வேண்டும்‌ என்றும்‌ வற்புறுத்தி உள்ளனர்‌.

இதனிடையே, இது குறித்த ஆதாரங்கள்‌ ஆசிரியர்‌ கூட்டமைப்பிற்கு வந்துள்ளன. ஆசிரியரை தொழிலுக்கு பயன்படுத்துவது, அவர்களை கட்டாயப்படுத்தி கொரோனா நேரத்தில்‌ அரசின்‌ அறிவிப்பை மீற வைப்பது, சட்டப்படி பெரும் குற்றங்கள்‌ ஆகும்‌.

இதன்‌ பேரில்‌ வருவாய்‌ துறை அதிகாரிகள்‌, அண்ணா பல்கலை, உயர்கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகள்‌, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று ஆசிரியர்‌ கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...