கோவையில் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கிய ஜெராக்ஸ் கடைக்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்!

கோவை: கோவையில் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கிய ஜெராக்ஸ் கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை: கோவையில் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கிய ஜெராக்ஸ் கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் விருதுநகர் செல்வதற்காக சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சூலூர் ஜெராக்ஸ் என்ற கடையில் விண்ணப்பித்து இ பாஸ் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், விருதுநகரில் வாகன சோதனையின் போலீசார் ஈடுபட்டிருந்த போது இ-பாஸ் போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக விருதுநகர் வருவாய் அதிகாரிகள் கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இயங்கி வந்த சூலூர் ஜெராக்ஸ் கடைக்கு சென்று வட்டாட்சியர் மீனா குமாரி ஆய்வு நடத்தினார்.



இதில் இ பாஸ் போலியாக தயாரித்து வழங்கப்படுவது விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், போலியாக இ பாஸ் வழங்கிய சூலூர் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பாலு மீது புகார் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் தலைமறைவான பாலுவை போலீசார் தேடி வருகின்றனர். கடைக்கு சீல் வைக்கப்பட்டது தெரியாமல் ஏராளமான வாகனங்கள் இ-பாஸ் வாங்குவதற்காக ஜெராக்ஸ் கடைக்கு வந்தவர்கள் கடை சீல் வைக்கப்பட்டதை அறிந்து அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றனர்.

இதையடுத்து, போலியான இ பாஸ் விவகாரம் தொடர்பாக சூலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...