கோவை: அன்னூரில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கான நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கலந்து கொண்டு திட்டபணிகளை துவக்கி வைத்தார்.
கோவை: அன்னூரில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கான நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கலந்து கொண்டு திட்டப்பணிகளைத் துவக்கி வைத்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள தரிசு நிலங்கள் பயன்பெறும் வகையில் குளம் குட்டைகளில் நீர் நிரப்பி விவசாயத்தை மேம்படுத்த அவிநாசி அத்திக்கடவு திட்டம் தமிழக அரசால் கடந்த 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது.
காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து அன்னூர் வரை குழாய்கள் மூலம் பைப்புகள் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டமானது ஆண்டிற்கு 1.5டிம்.சி தண்ணீர் எடுத்து குளங்கள், குட்டைகள், ஏரிகளில் தண்ணீர் நிரப்பிட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறும் அன்னூர் பகுதியில் இன்று அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கான நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை குன்னத்தூரம்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரும் அவிநாசி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
அன்னூர் மக்களின் கனவு திட்டமான அவிநாசி அத்திக்கடவு திட்டம் துவக்க நிகழ்ச்சி இப்பகுதியில் நடைபெற்றாலும் கொரோனா அச்சம் காரணமாக பெரிய அளவில் கூட்டம் கூட்டாமல் எளிய முறையில் சமூக இடைவெளி விட்டு இந்த பூஜை நடைபெற்றது.
இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும் போது கோவை பகுதியில் மட்டும் 258 குளம் குட்டைகள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.