கோவையில் புதிதாக துவங்கப்பட்ட ஏழு செங்கல் சூளைகளுக்கு தடை விதித்து வருவாய்த்துறையினர் உத்தரவு!

கோவை: கோவையில் கடந்தாண்டு புதிதாக துவங்கிய ஏழு செங்கல் சூளைகள் தொடர்ந்து இயங்க, வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

கோவை: கோவையில் கடந்தாண்டு புதிதாக துவங்கிய ஏழு செங்கல் சூளைகள் தொடர்ந்து இயங்க, வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். 

கோவை வடக்கு பகுதியில் உள்ள சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்குகின்றன. 

இவை தமிழக அரசின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் எழுப்பினர். செங்கல் சூளைகளின் இயக்கத்தை தடை செய்ய கோரும் வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, கோவை சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், செங்கல் சூளைகளில், ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, வீரபாண்டி, சின்னதடாகம் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு புதியதாக துவக்கப்பட்ட, ஏழு செங்கல் சூளைகள் இயங்க தடை விதித்தனர். 

புதிய செங்கல் சூளைகள் மீதான தடையால் ஏற்கனவே இயங்கி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...