டெல்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கோவை: கோவையில் ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: டெல்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

குறிப்பாக, கொரோனா தொற்று அதிகம் உறுதி செய்யப்பட்டுள்ள டெல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக கோவை வருபவர்கள் அதிகரித்துள்ளதால் கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

இந்த நிலையில், டெல்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கோவை வந்த 11 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில், ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

1. டெல்லியில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த நாமக்கலை சேர்ந்த 17 வயது பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி. 

2. சென்னையில் இருந்து காரில் கோவை வந்த வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த 51 வயது ஆண். 

3.நெகமத்தை சேர்ந்த 33 வயது ஆண். 

4. கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 40 வயது கார் ஒட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதி. 

5. கரூரில் இருந்து கோவை வந்த காரமடையை சேர்ந்த 61 வயது பெண்.

6. திருச்சியில் இருந்து வந்த துடியலூரை சேர்ந்த 38 வயது ஆண்.

7. சென்னையில் இருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 38 வயது ஆண்.

8. ராமநாதபுரத்தை சேர்ந்த 48 வயது பெண்.

9. ஊட்டியை சேர்ந்த 50 வயது பெண்.

10. சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த 12 வயது மற்றும் 5 வயது என இரு ஆண் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 11 பேரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில், கோவையைத் தவிர மற்ற மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தற்போது நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த மாவட்டத்தின் கொரோனா பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் நாளை வெளியிடப்படும் அறிக்கையில் தெரியவரும். 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...