வால்பாறையில் விஷ வண்டு கடித்து வன ஊழியர்கள் இருவர் படுகாயம் - பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி!

கோவை: வால்பாறையில் விஷ வண்டு கடித்து வன ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: வால்பாறையில் விஷ வண்டு கடித்து வன ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட ரயான் டிவிசன் பகுதியில் வனத்துறையைச் சார்ந்த வேட்டைத்தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது, அடர்ந்த வனப்பகுதியை கடக்கும் போது எதிர்பாராத விதமாக புதரில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் (கதண்டுகள்) பறந்து வந்து வனத்துறையினரை தாக்கிய போது வனக்காவலர்கள் தப்பி ஓடினர். ஆனால், விஷ வண்டுகள் தாக்கியதில் நாராயணன் (29) மற்றும் அரவிந்த் (27) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் அவர்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...