நீலகிரி: குன்னூர் ஆப்பிள் பீ பகுதியில் கிணற்றில் விழுந்த காட்டெருமையை 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயணைப்பு மற்றும் வனத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.
நீலகிரி: குன்னூர் ஆப்பிள் பீ பகுதியில் கிணற்றில் விழுந்த காட்டெருமையை 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயணைப்பு மற்றும் வனத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆப்பிள் பீ பகுதியில் சூரி பங்களா அருகே திறந்த நிலையில் இருந்த கிணற்றில் காட்டெருமை ஒன்று விழுந்தது. அப்போது, காட்டெருமையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் சுமார் 5 மணி நேரம் போராடி, 40 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட காட்டெருமையினை கிணற்றில் இருந்த ரிங்குகளை படிப்படியாக அகற்றி எடுத்து, மண் குவியல்களை உருவாக்கி காட்டெருமையினை ஜேசிபி வாகனம் மூலம் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் சோர்வுடன் காணப்பட்ட காட்டெருமையின் மீது தண்ணீர் தெளித்த வனத் துறையினர் பின்பு அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
இந்த காட்டெருமை மீட்புப் பணியில் தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன், தீயணைப்பு வீரர்கள் முரளி, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.