கோவை தென்னம்பாளையம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!

கோவை: கோவை தென்னம்பாளையம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவை தென்னம்பாளையம் பகுதியில் இளைஞரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை துடியலூர் அடுத்த காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் மதன்குமார். ஆட்டோ ஓட்டுநரான மதன்குமார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்து முன்னணி அமைப்பிலிருந்து விலகி விஎச்பி அமைப்புக்கு சென்றுவிட்டார். இதனால் இந்து முன்னணி அமைப்பிலுள்ள சக்தி உட்பட மூன்று பேர் அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதன் குமாரின் குடியிருப்பு பகுதிக்கு வந்த சக்தி உட்பட நான்கு பேர் மதன்குமாரை கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் மதன்குமார் புகார் அளித்தார். இதனிடையே சக்தி கத்தியைக் காட்டியை மிரட்டி வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார், சக்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...